திறன்விருத்திப்பயிற்சிநெறியைப் பூர்த்திசெய்த மாணவர்களின் கண்காட்சியும் விற்பனையும்
HizbullahCulturalhall
காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் திறன்விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வந்த திறன் மேம்பாடுக்கான பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களின் படைப்பாக்கங்களின் கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 04/01/2023 வியாழக்கிழமை நகரசபையின் செயலாளர் திருமதி.MRF றிப்கா ஷபீன் தலைமையில் ஹிஸ்புழ்ழாஹ் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.S.பிரகாஷ் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான UNDP CDLG திட்ட இணைப்பாளர் திரு.S.ஷாமிர் ஆகியோரும் கலந்துகொண்டனர். நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் MIM.நியாஸ் அவர்கள் மற்றும் இப்பிரிவிற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ALM.ஹாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களை சிறப்பான முறையில் வழிகாட்டல்களை வழங்கி ஊக்கப்படுத்தும் பொறுப்பாசிரியர் திருமதி.ஜீவமலர் மிக நீண்டகாலமாக இந்நிகழ்ச்சித்திட்டத்தில் மாணவர்களை தயார்படுத்தி நெறிப்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் படைப்பாக்கங்கள் 04/05 ஆகிய இரு தினங்களிலும் ஆக்கங்கள், பொருட்கள் என்பன கண்காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும்செய்யப்பட்டன.